Phone : 9942456409 | 7010632838
Email : dreamrealitytuition@gmail.com
Welcome to Educational News

பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்புக்கு நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து: தமிழக அரசு அதிரடி உத்தரவு

First slide


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க இருந்த நிலையில் கொரோனா பாதிப்பை ஒட்டி ஜூன் 15-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜூன்(08.06.2020) அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்திற்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உச்சநீதிமன்றம் ஜூன் 11ஆம் தேதி ஒத்தி வைத்தது. (09.06.2020) செவ்வாய்க்கிழமை அன்று தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்தது, இதனோடு 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்கள் தேர்வு நடத்தப்பட இருந்தன. ஆனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு விடுபட்ட பாடத்திற்கான தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்தார். மாணவ-மாணவிகளின் காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு மதிப்பை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண் பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20 சதவீதம் மதிப்பெண் வழங்குமாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Last updated June-09-2020